Asianet News TamilAsianet News Tamil

என் பொண்ணு ஸ்கூல்ல படிக்குறாங்க.. அவங்களுக்கா கல்யாணம்? பிரஸ் மீட்டில் கலங்கிய முக்கிய அமைச்சர்..!

அரசியல் செய்வதற்காக முக்கிய அமைச்சர் ஒருவரின் மகளை எல்லாம் திமுகவினர் சமூக வலைதளங்களில் விவாதப் பொருள் ஆக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

minister SP Velumani Disturbed
Author
Tamil Nadu, First Published Jul 4, 2020, 10:04 AM IST

அரசியல் செய்வதற்காக முக்கிய அமைச்சர் ஒருவரின் மகளை எல்லாம் திமுகவினர் சமூக வலைதளங்களில் விவாதப் பொருள் ஆக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கோவையில் இதுவரை 608 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு பிறகு மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் கொரோனா வேகமாக பரவலாம் என்று கூறப்பட்டது. ஆனால் கோவையில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. 608 பேருக்கு கொரோனா உறுதியான நிலையிலும் சுமார் 300 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். தினசரி மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கோவையில் கொரோனா மிகவும் குறைவாகவே பதிவாகிறது. மேலும் தமிழகத்தின் மிக முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாக கோவை திகழ்கிறது.

minister SP Velumani Disturbed

முதல் இரண்டு கட்ட ஊரடங்கில் இருந்து எழுந்து தற்போது தான் கோவை மெல்ல மெல்ல பொருளாதார ரீதியில் செயல்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோவையில் ஏன் முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லை என்று திமுக தரப்பில் இருந்து அங்கு அரசியல் செய்து வருகிறார். சின்ன சின்ன விஷயங்களை கூட பூதாகரப்படுத்தி கோவைக்கு ஆபத்து, கோவை மக்கள் அபாயத்தில் உள்ளனர் என வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

வெறும் 608 பேருக்கு மட்டுமே இதுவரை கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தினசரி குறைவாகவே கொரோனா பரவுவதை மனதில் வைத்தே மாவட்ட நிர்வாகம் கோவையில் முழு ஊரடங்கை மீண்டும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் திமுகவினரோ எஸ்பி வேலுமணியின் மகளுக்கு விரைவில் கோவையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக அமைச்சர் தூண்டுதலின் பேரின் கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்று வாட்ஸ்ஆப்பில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இதில் கொடுமை என்ன என்றால் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் மகள் தற்போதும் பள்ளியில் படித்து வரும் மாணவி. பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைக்கும அளவிற்கா அமைச்சர் எஸ்பி வேலுமணி இருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர. ஆனால அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்த விஷயத்தில் முக்கிய அமைச்சரின் மகளை முன்னிலைப்படுத்தி குறிப்பிட்ட சில திமுகவினர் கோவையில் அரசியல் செய்து வருகின்றனர். இதனை அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளிப்படையாக பிரஸ் மீட்டில் பேசிவிட்டார்.

minister SP Velumani Disturbed

கோவையில் கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கிறது. மக்கள் தற்போதைய தளர்வுகளை முறையாக பயன்படுத்தினாலே போதும் கொரோனா பரவலை தடுத்துவிடலாம். முழு ஊரடங்கை அமல்படுத்தும் அளவிற்கு கோவையில் நிலைமை தீவிரமாக இல்லை. அப்படி இருக்கையில் எதற்கு தேவையில்லாமல் ஒரு முழு ஊரடங்கை கோவையில் அமல்படுத்த வேண்டும் என்று எஸ்பி வேலுமணி கேள்வி எழுப்பினார். என்னுடைய மகளுக்கு திருமணம் என்பதால் முழு ஊரடங்கு போடவில்லை என்று வதந்தி பரப்புகிறார்கள்.

என் மகள் இன்னும் ஸ்கூலுக்கு போகும் சிறுமி தான். அவருக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும்? ஏன் இப்படி எல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என கூறி பிரஸ் மீட்டில் கலங்கியுள்ளார் வேலுமணி.

Follow Us:
Download App:
  • android
  • ios