ஆனால் அந்த மனுவின் மீதும் இதுவரையில் சம்பந்தப்பட்ட யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்ட வினோதம்தான் நடந்திருக்கிறது.
அமைதியான கோயம்புத்தூரை போராட்டக் களமாக மாற்ற நினைக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் ஆணையாளர் மீதும் நடவடிக்கை வேண்டும் என்று அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்,
வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். பொய்யான வாக்குறுதி மூலம் ஆயிரம் ரூபாய் தருவதாக விண்ணப்பம் வழங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவின் விவரம் பின்வருமாறு:- நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் எக்கு கோட்டையாக இருக்கக்கூடிய கொங்கு மண்டலத்தை எந்தவித கொடும் செயலையும் செய்து கைப்பற்ற துடிக்கும் திமுக,
வெளிப்பாடாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரவுடிகளையும், கூலி படைகளையும் மின்சாரத்துறை அமைச்சரும், அந்த மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் பல்வேறு புதுமுகங்கள் மாவட்டம்தோறும் பரவியிருக்கின்றனர், வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு வாகனங்களில் கரூரிலிருந்து கொண்டுவரப்பட்ட ஹாட் பாக்ஸ்களை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய முயற்சிக்கும்போது அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எழுத்து மூலமாகவும் புகாராக அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதிக்கு வந்த துணை ஆணையர் புகார் தந்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்த வினோதம் நிகழ்ந்திருக்கிறது.

புகார் கொடுத்த கல்யாணசுந்தரம் உட்பட எட்டு அதிமுகவினரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று, தரையில் அமர வைத்து, கொடும் சொற்களை உபயோகப்படுத்தி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள், கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள் காவல்துறையினர். பிடிக்கப்பட்ட பொருட்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடத்தில் ஒப்படைக்காமல் காவல்துறையினரே முன்நின்று வாக்காளர்களுக்கு வினியோகம் செய்தது கொடுமையிலும் கொடுமை. இவை அனைத்தையும் கண்டிக்கின்ற விதமாக முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி கொரடாவுமான திரு. எஸ். பி. வேலுமணி எம்எல்ஏ, தலைமையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சித்தலைவரிடத்திலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்திலும் எழுத்துப்பூர்வமாக 14. 2. 2022 அன்று மனு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த மனுவின் மீதும் இதுவரையில் சம்பந்தப்பட்ட யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்ட வினோதம்தான் நடந்திருக்கிறது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 5 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் திரு. ஸ்டாலின் படம் பதித்த விண்ணப்பங்களை விநியோகம் செய்தார்கள். அதன்மீது அப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து இருந்தோம். அதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று ஒரு விண்ணப்பம் அளித்து தவறான பாதையை தொடர்ந்து தேடிய திமுகவினர் மீது தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் புகார் அளித்து இருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே சொன்ன குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் என்று சொல்லி தற்போது ஒரு விண்ணப்பத்தை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு இருக்கிறோம். பல புகார்கள் தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரியிடத்தில் வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தலைமை தேர்தல் ஆணையருக்கு மட்டுமே தெரியும். இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகிறோம் என கூறப்பட்டுள்ளது.
