தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருந்ததாகவும் அதனால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

கோடை காலம் என்பதால் தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் வீட்டு உபயோகத்துக்கான மின் நுகர்வு அதிமானதையடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது. இதற்கு, மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வழக்கமாக கிடைத்து வந்த மின்சாரத்தில் 750 மெகாவாட் திடீரென குறைக்கப்பட்டதால்தான் மின்வெட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார்.

மின்வெட்டு பிரச்னை பெரிய அளவுக்கு செல்வதற்கு முன்பே இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டதுடன், கத்திரி வெயில் காலத்தில் சட்டென்று மாறிய வானிலையின் காரணமாகவும் மின் தேவை குறைந்து, தமிழகம் மீண்டும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருந்ததாகவும் அதனால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. 

ஆனால் தமிழக அரசு இந்த கருத்தை மறுத்து வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 'தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. மழை காரணமாக கடந்த 2 நாட்களாக மின் நுகர்வு குறைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க : பிரதமருடன் ரகசிய மீட்டிங்.. தமிழகம் முழுக்க மக்கள் சந்திப்பு.! பக்கா பிளானில் களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி

இதையும் படிங்க : இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !