அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26,000 மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

கோபிசெட்டிப்பாளையத்தில் மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்களின் துறையின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அனைத்து துறையிகளிலும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதிலிருந்து அவர் பணியை திறம்பட செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.