minister sellur raju wants to merge two factions of admk

அதிமுகவும் தினகரனும் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையின் 7வது சுற்று முடிவில் 34346 வாக்குகளைப் பெற்று மதுசூதனனை விட தினகரன் 16105 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 18241 வாக்குகளையும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் 9206 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

குக்கரில் வெற்றி பெற்று இரட்டை இலையை மீட்பதை குறிக்கோளாகக் கொண்டுதான் ஆர்.கே.நகரில் தினகரன் களம் கண்டார். இந்நிலையில், கொண்ட குறிக்கோளில் வெற்றியை நெருங்கிவிட்டார் தினகரன்.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் திமுகவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. நாங்கள்(ஆட்சியாளர்கள்) தானே தினகரனை போனமுறை தோள்களில் தூக்கி சுமந்து வாக்கு கேட்டோம். ஆனால், இந்தமுறை அவருக்கு எதிராக வாக்கு சேகரித்தோம். அதைக்கூட மக்கள் கருத்தில் கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

மேலும் இந்தமுறை நாங்கள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தோமே தவிர குக்கருக்கு வாக்கு போட வேண்டாம் என சொல்லவில்லை(நோட் திஸ் பாயிண்ட்). 

அதிமுக ஆட்சியை மக்கள் எதிர்க்கவில்லை. அப்படி எதிர்த்திருந்தால், அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்குத்தான் போயிருக்க வேண்டும். தினகரனுக்கு அல்ல. (தினகரனின் வாக்குகளையும் அதிமுகவின் வாக்குகளாகவே கருதுவது போன்ற கருத்து). 

இரண்டு தரப்பும் (ஓபிஎஸ்-இபிஎஸ் மற்றும் தினகரன்) சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்? என மக்கள் கேள்வி எழுப்புவதையே இந்த முடிவு காட்டுகிறது.

இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்திலிருந்து அதிமுகவும் தினகரனும் ஒன்றுதான் என்பதையும் விரைவில் இணைந்துவிடுவோம் என்பதையும் மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.