minister sellur raju teased opposition parties

எதிர்க்கட்சிகளைக் கண்டு டெங்குவும் வெள்ளமும் பயந்து ஓடிவிட்டது என அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலாக தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வைகை ஆற்று நீரை தெர்மாகோலை வைத்து மூடி ஆவியாகாமல் தடுக்க முயன்றதிலிருந்து மிகப் பிரபலமானார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அதன்பிறகு பல்வேறு தருணங்களில், பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டார்.

மதுரையில் தரச்சான்று பெற்ற உணவுப் பொருட்களின் கண்காட்சியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இந்த விழாவில் எதிர்க்கட்சியான திமுகவை கிண்டலடிக்கும் வகையில் பேசியுள்ளார்.

விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, எதிர்க்கட்சிகளைக் கண்டு அஞ்சியும் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளாலும் டெங்குவும் வெள்ளமும் பயந்து ஓடிவிட்டது என தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசை விட திமுக மக்களுக்காக சிறப்பாக பணியாற்று கொண்டிருக்கிறது என்ற ஸ்டாலினின் கருத்தை சிறந்த ஜோக் என அமைச்சர் விமர்சித்தார்.

தமிழகத்தின் நீர்நிலைகளை தூர்வாரியதால்தான் 2000 நீர்நிலைகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.