இளைஞர்களுக்கு வழிகாட்டும் விஷயத்தில் அப்துல் கலாமுக்கே அதிமுகதான் முன்னோடி தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரையில் எம்ஜிஆர் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இளைஞர்களுக்கு விடிவெள்ளியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம். ஆனால் அவருக்கு முன்னதாகவே இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது அதிமுக தான். அதற்கு நானே ஒரு சாட்சி. சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு, அமைச்சர் பதவி வரை அளித்தது அதிமுக தான் என உருக்கமாக கூறினார். 

அதிமுகவில் சாதாரண தொண்டனும் உயர் பதவிக்கு வரலாம். அதற்கு முதல்வரும் துணை முதல்வருமே சாட்சி. ஆனால் திமுகவில் 60 வயது வரை ஸ்டாலின் தான் இளைஞரணி தலைவர். அடுத்து அவர் மகனை இளைஞரணியின் பதவிக்கு கொண்டுவர பார்க்கிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ திமுகவை விமர்சித்து பேசினார்.