கஜா புயல் குறித்து நடிகர் கமல் முட்டாள்தனமாக கருத்துக்கள் சொல்லிவருகிறார். அவருக்கு மூளையில் கோளாறு உள்ளது. அதை டாக்டர்களை வைத்து சீக்கிரம் சிகிச்சை செய்யவேண்டும் என்கிறார் தமிழக சயிண்டிஸ்ட் மினிஸ்டர் செல்லூர் ராஜு.

கஜா புயல் பூமியில் தமிழக அமைச்சர்களை விட அதிக நாட்கள் செலவழித்து மக்களிடம் அக்கரையுடன் உரையாடி வரும் கமல், “கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.” என்று அமைச்சர்களுக்கு சூடு வைத்தார்.


இதைக்கேட்டு கொந்தளித்த செல்லூர் சயிண்டிஸ்ட், “தமிழக அரசு அதி வேகமாக செயல்பட்டு வருகிறது  கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறது  கூர்மையான அரசு.! ஆனால் மூளையில் கோளாறு உள்ள கமல்ஹாசனுக்குஇதெல்லாம் தெரியாது.அவருக்கு டாக்டர்கள் வைத்து சீக்கிரம் சிகிச்சை அளிக்கவேண்டும்” என்று கடுமையாக  பதில் அளித்திருக்கிறார்.

தமிழக அமைச்சர்கள் போகத் துணியாத இடத்துக்கெல்லாம் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்லிவரும் கமலை ஒரு அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இவ்வளவு கேவலப்படுத்தவேண்டாம்.