உடல்நலக்குறைவு காரணமாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு சில நாட்களாகவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கான சிகிச்சை எடுத்து கொண்ட பிறகும் காய்ச்சல் பூரணமாக குணமடையால் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அமைச்சரின் உடல்நிலை குறித்து அரசு தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேபோல மருத்துவமனை தரப்பிலும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் காய்ச்சல் குணமாகும் வரையில் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.