ஆ.ராசா சர்ச்சை பேச்சு விவகாரம் குறித்து கேள்வி... தொடர்ந்து தவிர்த்து வரும் அமைச்சர் சேகர்பாபு!!
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் போர்கால அடிப்படையில் இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்று தமிழக அரசுக்கு அமைச்சர் சேகர்பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் போர்கால அடிப்படையில் இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்று தமிழக அரசுக்கு அமைச்சர் சேகர்பாபு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக அரசை போல் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் போர்கால அடிப்படையில் இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது உள்ள தமிழக அரசை போல் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கூட போர்கால அடிப்படையில் இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை. 1200 கிலோ மீட்டர் அளவிற்கு மழைநீர் கட்டுமான பணி நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மழையால் குறுவை பயிர்கள் சேதம்... பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்... ஈபிஎஸ் வலியுறுத்தல்!!
அதை தொடர்ந்து பொன்முடி குறித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என விமர்சித்த செல்லூர் ராஜி எந்த அடிப்படையில் அதை கூறினார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது விமர்சனத்திற்கு உண்டான விளக்கத்தை அந்த அமைச்சரே விளக்கம் கொடுத்த பிறகு அதை சர்ச்சையாக்குவது சரியாகாது. அதை தவிர்த்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சாலசிறந்தது என்று அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு தங்க கவசம் வழங்கப்பட்ட விவகாரம்... உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு!!
பின்னர் மனுஸ்மிருதி குறித்து ஆ.ராசா கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதனை தவிர்த்த சேகர்பாபு, மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து பேசி செய்தியாளர்களை திசை திருப்ப முயன்றார். மேலும் மாநகராட்சி தெரு, பெயர் பலகையில் சுவொரொட்டி ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்ளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கும் செயல்கள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே ஆ.ராசா சர்ச்சை பேச்சு குறித்து கேட்ட போது அவர் தனக்கு காது கேட்கவில்லை என்பது செய்கை காட்டிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.