அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு தங்க கவசம் வழங்கப்பட்ட விவகாரம்... உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு!!
தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்திற்கு உரிமைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்க கவசத்திற்கு உரிமைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கினார். 3.7 கோடி ரூபாயில் 13 கிலோ எடை கொண்ட இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை விழாவின் போது வங்கிக்கு நேரில் வந்து அதிமுக பொருளாளர் கவசத்தை பெற்று அதை தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பதும் பூஜை முடிந்த பின்னர் அந்த கவசத்தை திரும்ப பெற்று வங்கியில் ஒப்படைத்தும் வழங்கம்.
இதையும் படிங்க: உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !
அந்த வகையில் அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை அவர் தங்க கவசத்தை பெற்று, பூஜை முடிந்தவுடன் வங்கியில் ஒப்படைத்து வந்தார். இதனிடையே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்தத்தை அடுத்து அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை அடுத்து இந்த ஆண்டுக்கான முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை விழா அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கடந்த வாரம் தேவர் தங்க கவசத்தை பெற உரிமை கோரி கடிதம் மற்றும் அதற்கான ஆவணங்களை வங்கியில் சமர்பித்தார்.
இதையும் படிங்க: திமுகவிற்கு பல்டி அடித்த அதிமுக கவுன்சிலர்கள்..! ஊராட்சியையும் தட்டி தூக்கிய செந்தில் பாலாஜி
மேலும், தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டது. கொடுக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு தனியார் வங்கி நிர்வாகம், தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி அது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கிய தங்க கவசத்துக்கு உரிமை கோரி வங்கியில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.