Asianet News TamilAsianet News Tamil

"ராஜமீனாட்சி கூறிய அனைத்து புகார்களும் பொய்" - அடித்து கூறும் அமைச்சர் சரோஜா...

minister saroja refused the complaints of rajameenatchi
minister saroja-refused-the-complaints-of-rajameenatchi
Author
First Published May 16, 2017, 12:50 PM IST


கடந்த சில நாட்களுக்கு முன், குழந்தைகள் நல துறை அதிகாரி ராஜமீனாட்சியை மிரட்டி, அமைச்சர் சரோஜா ரூ.30 கேட்டதாக புகார் கூறப்பட்டது. இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமைச்சர் சரோஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

அதிகாரி ராஜமீனாட்சி கூறிய அனைத்து புகார்களும் பொய்யானவை. உண்மைக்கு புறம்பானவை. எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இதுபோன்று பொய் புகாரை கூறி வருகிறார்.

minister saroja-refused-the-complaints-of-rajameenatchi

அவர் மீது நிதி கையாடல் செய்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. அதை அரசு விசாரிக்க இருந்தது. அந்த நேரத்தில், அவர் தப்பிப்பதற்காக என்மீது வீண் பழியை போட்டுவிட்டார். அரசின் விசாரணையை திசை திருப்புவதற்காகவே, என் மீது வீண் பழியை போட்டுள்ளார். குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.

குழந்தைகள் நலன் நிதியில், போலி ரசீதுகள் தயார் செய்து, மோசடியில் ஈடுபட்டார் அவரிடம் விசாரணை நடத்த இருந்த நேரத்தில் அவர், புதிய வதந்தியை பரப்புகிறார்.

கடந்த 7ம் தேதி அவர் என்னை சந்தித்தார். அப்போது, தனக்கு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு அரசு விதிகளில் இடம் இல்லை என்பதால், அவரது கோரிக்கையை நான் மறுத்துவிட்டேன்.

minister saroja-refused-the-complaints-of-rajameenatchi

பணியிட மாற்றம், நிரந்தரம் செய்வதற்கு கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வேண்டும். ஆனால், ராஜ மீனாட்சி, நேரடியாகஎன்னை சந்தித்தார்.

நானே அவரை சந்திக்க அழைத்ததாக கூறினார். ஆனால், அவரை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் அழைக்கவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், வரும் ஜூன் 8ம் தேதி, ராஜமீனாட்சியிடம் விசாரிகக அரசு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios