ரேஷன் அரிசி விவகாரம்.. கட்சிக்காரர் சொன்னதை அப்படியே பேசிவிட்டார் அமைச்சர்.. தமிழக அரசு பதிலடி

இந்திய உணவுக் கழகம்  அரிசி அளவு குறியீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து, அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அப்படி இருக்கின்ற சமயத்தில், எப்படி தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு வழங்க முடியும்? என்றும் கடைகளை ஆய்வு செய்து, அதன் பின்னர் பொருட்கள் தரமில்லை என்று சொன்னால்கூட  நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Minister Sakkarapani  press meet on central minister Piyush Goyal  comment

தமிழகத்தில் தரமான அரசியை மத்திய அரசு கொடுத்தும், ஆளும் திமுக அரசு நியாயவிலைக்கடைகளில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு விநியோக்கிறது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பியூஷ் கோயூல் நிகழ்ச்சியில் ஒன்றில் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வித்மாக, சென்னை எழிலகத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியவதாவது;

இந்திய உணவுக் கழகம் அரிசி எப்படி இருக்க வேண்டும், அரிசி அளவு குறியீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்திருக்கிறது. அதன்படி இருந்தால்தான், அந்த அரிசியை கிடங்கிற்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய உணவுக் கழக அதிகாரிகள்  கண்காணித்து வருகின்றனர். அப்படி இருக்கின்ற சமயத்தில், எப்படி தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு வழங்க முடியும்? கடந்த ஜுன் மாதம் இறுதியில், தமிழகம் வந்திருந்த அமைச்சர் பியூஷ் கோயல் , நியாயவிலைக்கடைகள் கட்டமைப்பு குறித்து கேட்டறிந்தார். ஜுலை 5ஆம் தேதி டெல்லிக்கு வரும் போது, ரேஷன் கடையைப் பற்றி Power Point Presentation காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க:அமித்ஷாவுக்கு 'தில் ' இருந்தா.. குஜராத்கு போய் இதைச் செல்லத் தயாரா.. பாஜகவைக்கு சவால் விட்ட திருமாவளவன்.

அதன்படி, இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில உணவுத் துறை அமைச்சர்கள், உணவுத் துறை செயலாளர், அதிகாரிகள் எல்லாம் கலந்துகொண்ட கூட்டத்தில் தமிழக உணவுத்துறை முதன்மைச் செயலாளர், தமிழக நியாயவிலைக்கடை கட்டமைப்பு குறித்து விளக்கினார். அதைப் பார்த்து, தமிழ்நாட்டில் இப்படி கட்டியிருக்கிறார்கள், உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்று உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டினார்

இன்றைக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கடைகளை ஆய்வு செய்து, அதன் பின்னர் பொருட்கள் தரமில்லை என்று சொன்னால்கூட  நாம் ஏற்றுக் கொள்ளலாம்.  அப்படி செய்யாமல், ஒரு பொதுக்கூட்டத்திற்குச் சென்று தமிழக அரசை குற்றம் சாட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் சொல்லியிருப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.  

மேலும் படிக்க:20 நாளில் தமிழகத்தை முற்றுகையிடும் 50 மத்திய அமைச்சர்கள்.! என்ன காரணம் தெரியுமா.? ஸ்டாலினை அலறவிடும் அண்ணாமலை

எனவே மத்திய அமைச்சர் கடையையே பார்க்காமல், அவர்களது கட்சிக்காரர்கள் சொன்ன கருத்தை பொதுக்கூட்டத்தில் கூறியிருப்பது உண்மையிலேயே எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.மாதாமாதம் 30 அமைச்சர்களை தமிழ்நாட்டிற்கு வரச் சொல்லப் போகிறேன் என்றும், அனைத்துத் துறைகளையும் ஆய்வு செய்யப் போகிறோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். ஏனென்றால், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்றது, அதனால் அரசியல் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார்கள். 
 
தமிழ்நாட்டில் மட்டும் தான் சிறப்பு பொது விநியோகத் திட்டம் இருக்கிறது, அரிசி, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை வெளிசந்தையில் வாங்கி குறைந்த விலைக்கு கொடுக்கிறோம். குற்றம் சொல்லக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் நியாயவிலைக் கடைகளில் சென்று பார்த்துவிட்டு, இந்தப் பொருள் தரம் இல்லை என்று சொல்லியருந்தார்கள் என்றால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.    

மேலும் படிக்க:அரசியல் தலைவர்கள் மறைவு..! இரங்கல் தெரிவித்து தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios