பெங்களூருவில் தங்கினால் துரதிர்ஷ்டம்..! தினமும் 350 கி.மீ பயணிக்கு அதிசய அமைச்சர்..!

கர்னாடக மாநில அமைச்சர் ஒருவர், ஜோசியத்தால் தினமும் 350 கிலோ மீட்டர் தொலைவு சென்று வர நேரிட்டு உள்ளது

சமீபத்தில் கர்னாடக மாநில முதல்வராக பொறுப்பு ஏற்ற குமாரசாமியின் அண்ணனும் அம்மாநில பொதுப்பணிதுறை அமைச்சருமான ரேவண்ணா தினமும் 350 கிலோ மீட்டர் பயணம் செய்து பெங்களூரு அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்.

ஏன் இப்படி என விசாரித்தால் பல சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், மாஜத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணா ஹாசன் மாவட்டத்தில், ஹோலேநாரசிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று  எம்எல்ஏ ஆகி உள்ளார்

இவருக்கு பொதுப்பணிதுறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இவர் பெங்களூருவில் இருந்து தனது தொகுதிக்கு தினமும் 350 கி.மீ. பயணிக்கிறார். ஏன் என்று காரணத்தை விசாரித்தால் அவர் அமைச்சராக பதவி ஏற்ற நேரத்தை வைத்து பார்க்கும் போது, பெங்களூருவில் இரவு தங்குவது துரதிர்ஷடமானது என்று ஜோசியர் ஒருவர் எச்சரித்து உள்ளாராம். இதனால் தான் அமைச்சர் தினமும் இவ்வளவு தூரம் பயணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அமைச்சரிடமே கேட்ட போது, "பெங்களூருவில் தங்க எனக்கு இன்னும் வீடு ஒதுக்க வில்லை என்று கூறி உள்ளாராம்.

ஆனால் பெங்களூரு அருகே உள்ள பனசங்கரில் அமைச்சருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் உறவினர் வீடுகள் இருந்தும் அதில் தங்காமல் தவிர்த்து வருகிறார்.

ஜோசியர் போட்ட ஒரு கண்டிஷன்..:

பெங்களூருவில் தங்க வேண்டும் என்றால் அரசு ஒதுக்கும் பங்களாவில் தான் தங்க வேண்டும் எனவும், அதுவும் குமார பார்க்கில் உள்ள பங்களாவில் தங்குவது தான் ரேவண்ணாவுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோசியர் தெரிவித்து உள்ளாராம். அதனால் தான் அமைச்சர் தினமும் தான் வெற்றி பெற்ற தொகுதிக்கு  சென்று வருவதாக கூறப்படுகிறது.

இது என்னடா அமைச்சருக்கு நேர்ந்த கொடுமை என பல கிசுகிசுக்குவதை கேட்க முடிகிறது.