தட்கல் முறையில், மின் இணைப்பு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. சக்திவேல் எம்.எல்.ஏ. சேலம் மாநகராட்சியில், குப்பையிலிருந்து மின் உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர், தங்கமணி மாநகராட்சி முன்வந்தால், மின் வாரியம் உதவும் என்றார்.  சேலம் மாநகராட்சியில், குப்பையின் ஒரு பகுதியில், 'பயோ காஸ்' உற்பத்தி செய்கின்றனர். மீதி உள்ள குப்பையை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், உரம் தயாரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சக்திவேல் கூறினார். மேலும் குப்பையில் இருந்து, மின்சாரம் தயாரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு தங்கமணி மாநகராட்சி மட்டுமின்றி, தனியார் முன்வந்தாலும், மின் வாரியம் உதவி செய்ய, தயாராக உள்ளது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, கொள்முதல் செய்யவும், தயாராக உள்ளோம் என்றார். இதற்கு சேலத்தின் முதல் பெண் மேயரான திமுகவைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷினி அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.