அண்மைக்காலமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுக்கூட்டத்திலோ அல்லது செய்தியாளர்கள் சந்திப்பிலோ  தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தாய் மாமா இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்றும், ராகுலுக்கு யார் மடியில் உட்கார வைத்து காது குத்தினார்கள் என்றும் கேட்டு சில நாட்களுக்கு முன் சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்நிலையில்  கடந்த  21 ஆம் தேதி சாத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் , ஓட்டுக் கேட்கவும் சரியா வரல. நன்றி சொல்லவும் வரல. டெல்லியிலயே உட்கார்ந்திருக்கான். இங்க வந்தான்னா பன்னி சுடற துப்பாக்கிய எடுத்து சுட்டுடுங்க” என்று பேசினார்.

ஆனால் உடனே சுதாரிக்குக் கொண்ட அவர், கொன்னுடாதீங்க.  சும்மா ரப்பர் குண்டு துப்பாக்கிய எடுத்து சுடுங்க அவனை என சொல்லி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இதையடுத்து இன்று விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜா சொக்கர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் , சாத்தூர் காவல் நிலையத்துக்கு சென்று ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளனர்.