அமைச்சர் ராஜேந்தி பாலாஜியைப் பொறுத்த வரை அவர் அதிமுக அமைச்சராக இருந்தாலும் பாஜகவுக்கு அதிகமாக சப்போர்ட் பண்ணி பேசுவார். உதாரணத்துக்கு, தமிழக ஆட்சிக்கு ஆபத்து வராது என்றும், அப்படி ஒன்று வந்தால் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் என்று பாஜகவை ஐஸ் வைத்து பேசினார்.

மற்றொரு முறை பேசும் போது மோடி தான் தமிழகத்தின் டாடி என்றெல்லாம் அதிரடியாக பேசினார். இந்நிலையில் தான் அவர் பாஜகவுக்கு எதிராக பேசி அக்கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும், இங்கு விரையில் பாஜக ஆட்சி வந்தே தீரும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி  கொடுத்த  அமைச்சர் ராஜேந்தி பாலாஜி, தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விபரீத முடிவை பாஜக எடுக்க வேண்டாம் எச்சரித்தார். நீங்க டெல்லியில் ஆட்சியை பிடிங்க..வேறு எந்த மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிங்க… நாங்க வேண்டாமென்று சொல்லமாட்டோம், அங்க மோடி இருக்கட்டும்..இங்கு அண்ணன் எடப் பாடி இருக்கட்டும் என ரைமிங்காக பேசி அதிரவைத்தார்.

உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்க  வர்றோம்…. எங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நீங்க வாங்க…  ஆனால் எங்க இடத்திற்கு வர வேண்டும் என பாஜக நினைக்க வேண்டாம், அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். அதே மாதிரி உங்க இடத்துக்கு நாங்க வரணும்னு நினைக்க மாட்டோம் எனப் பேசி அரங்கை அதிர வைத்தார்.

தொடக்கத்தில் இருந்தே  பாஜகவுக்கு ஆதரவாகவே பேசி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு  பாஜகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.