Asianet News TamilAsianet News Tamil

கிராமங்களுக்கு இண்டர்நெட் கூடாது என முட்டுக்கட்டைப் போடுகிறார்... மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் புது குண்டு!

“ 2,000 கோடி ரூபாய்க்கு மேலான பாரத் நெட் டெண்டர் முறைகேடுகளை விசாரித்தால்- அதிமுக ஆட்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் போல் இதிலும் வெளிவரும். இன்று “அதிகார போதையில்” இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால், எங்கள் தலைவர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் அ.தி.மு.க அரசின் ஊழல்கள் நிச்சயம் வீதிக்கு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று அறிக்கையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை ஐ.பெரியசாமி விமர்சித்திருந்தார். 
 

Minister R.B.Udayakumar blame m.k.Stalin on Bharath net issue
Author
Madurai, First Published Jan 30, 2020, 10:12 PM IST

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் இண்டெர்நெட் கிடைக்கக் கூடாது என திமுக தலைவர் முட்டுக்கட்டை போடுகிறார்” என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.Minister R.B.Udayakumar blame m.k.Stalin on Bharath net issue
தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் பாரத் நெட் டெண்டரில் ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “ 2,000 கோடி ரூபாய்க்கு மேலான பாரத் நெட் டெண்டர் முறைகேடுகளை விசாரித்தால்- அதிமுக ஆட்சியில் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக் கூடுகள் போல் இதிலும் வெளிவரும். இன்று “அதிகார போதையில்” இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால், எங்கள் தலைவர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் அ.தி.மு.க அரசின் ஊழல்கள் நிச்சயம் வீதிக்கு வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்று அறிக்கையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை விமர்சித்திருந்தார்.

 Minister R.B.Udayakumar blame m.k.Stalin on Bharath net issue
இந்தக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற பிரம்ம குமாரிகளின் புதிய கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மு.க. ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவின் நல்லாட்சியை நாடும், நாட்டு மக்களும் எற்று கொண்டாலும் ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கிராமங்களில் இண்டெர்நெட் கிடைக்கக் கூடாது என திமுக தலைவர் முட்டுக்கட்டை போடுகிறார்” என உதயகுமார்  தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios