Asianet News TamilAsianet News Tamil

கறுப்பு பணம் இன்னும் ஒழியல - பொன்.ராதா ஒபன் ஸ்டேட்மெண்ட்...!

minister pon.rathakirushnan speech against modi plan
minister pon.rathakirushnan speech against modi plan
Author
First Published Nov 7, 2017, 6:06 PM IST


கறுப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூற முடியாது என்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கறுப்புப் பணத்தை ஒழிப் பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தது. 

இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளிலும் ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். ஏராளமானோர் வங்கி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 

பழையா நோட்டிற்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டும் வெளியிடப்பட்டது. 

இதன்மூலம் மக்கள் சில்லரை தட்டுப்பாட்டிலும் சிக்கி தவித்தனர். ஆனால் அதன்பிறகு பிரபலங்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ஏராளமான புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின. 

மேலும் கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி களமிறங்கும் போது குடிமகன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். 

ஆனால் ஓராண்டு காலம் ஆகியும் இதுவரை அப்பணம் செலுத்தப்படவில்லை. முறையான விளக்கமும் அளிக்கவில்லை. இதையடுத்து டிஜிட்டல் முறையையும் மோடி கையில் எடுத்தார். 

இந்த முறைகளினால் கறுப்பு முற்றிலும் ஒழியும் என பாஜக தெரிவித்து வந்தது. 

இதைதொடர்ந்து வரும் நவம்பர் 8 ஆம் தேதி ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பை அறிவித்த மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில், கறுப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூற முடியாது என்று நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios