நீட் தேர்வு ரத்து..? மத்திய அரசு கேட்ட விளக்கம்..! சட்டத்துறை மூலம் பதில் - மா சுப்பிரமணியன்
பருவமழையின் மழையின் போது இரவு பகலாக சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கான பாராட்டு விழா வரும் 31ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
கிங்ஸ் மருத்துவமனை - முதல்வர் ஆய்வு
சென்னை கிண்டியில் 4.9 ஏக்கர் பரப்பளவில் கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை பணியினை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது கிண்டி கிங் மருத்துவமனை தொடர்பான கட்டுமானங்களை விளக்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சி அமைந்த அடுத்த மாதமே 230 கோடியில் கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து முதல்வர் அவர்களே அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
இன்று இரண்டாவது முறையாக ஆய்வு செய்தார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள பாதை, தூய்மைப்பணியாளர்களுக்கான இடம், பசுமை கட்ட வளாகமாக மாற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறினார். கிங் இன்ஸ்டியூட் பணிகள் செப்டம்பர் வரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முதல்வரே தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இதன் காரணமாக முன்கூட்டியே பணிகள் நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்..! திடீரென குஜராத்திற்கு சென்ற ஓபிஎஸ்.! என்ன காரணம் தெரியுமா.?
ஒரிரு வாரத்தில் விளக்கம்
சென்னை மாநகரத்தில் 209 கி.மீட்ட நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் துவக்கப்பட்டு 161கி.மீ பணிகள் மழை காலத்திற்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்தது. இதன் காரணமாக மழை நீர் தேங்கவில்லை பொது மக்களிடம் பாராட்டினை திமுக அரசு பெற்றதாக தெரிவித்தார். மீதமுள்ள 48கி.மீ பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சைதாபேட்டை தொகுதிக்குட்பட்ட வண்டிகாரன் தெரு, மசூதி தெரு, பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெறுகிறது. இதனையும் முதலமைச்சர் பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.
பருவமழையின் மழையின் போது இரவு பகலாக சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கான பாராட்டு விழா வரும் 31ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். நீட் நுழைவுத் தேர்வு குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் கேட்ட விளக்கத்திற்கு தமிழக சட்டத்துறையின் மூலமாக ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியா..? மக்கள் நீதி மய்யம் எடுத்த அதிரடி முடிவு