ஈரோடு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியா..? மக்கள் நீதி மய்யம் எடுத்த அதிரடி முடிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்க பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டுவெற்றி பெற்ற இவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிரிவாக பிளவு பட்டுள்ளது. இரண்டு அணி சார்பாகவும் போட்டியிட வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
சுயநலத்திற்காக செயல்படவில்லை..!ஆதாரமற்ற குற்றச்சாட்டை என் மீது கூறுகிறார்கள்- தமிழிசை வேதனை
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகக்குழு கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் பேரவைத் தலைவர் திரு. சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிற்சங்கப் பேரவையின் வளர்ச்சி, மக்கள் நீதி மய்யம் 6ம் ஆண்டு துவக்க விழா, மே-1 உழைப்பாளர் தின விழா, பேரவைக்கு புதிய பொறுப்பாளர் நியமனம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சூடு பிடிக்கும் ஈரோடு தேர்தல் களம்..! திடீரென குஜராத்திற்கு சென்ற ஓபிஎஸ்.! என்ன காரணம் தெரியுமா.?
ஈரோடு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா.?
மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் களம் காண வேண்டும் என வலியுறுத்தியும் அதில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் திரு. கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவை தலைவர் கமல்ஹாசன் கவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்