தமிழகத்தை பொறுத்தவரை எதை செய்தாலும் அதை அரசியல் ஆக்குவதே வாடிக்கையாகி விட்டதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை: தமிழகத்தை பொறுத்தவரை எதை செய்தாலும் அதை அரசியல் ஆக்குவதே வாடிக்கையாகி விட்டதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான இன்னமும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் வேளாண் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

2வது முறையாக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பாஜக பல்வேறு அதிரடி சட்டங்களை நிறைவேற்றியது. அனைத்து சட்டங்களும் சரிபாதியாக ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் களத்தில் களமாடப்பட்டன.

இந்த வரிசையில் அடிப்படையில் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு என விமர்சனங்கள் எழுந்தன. வட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அதுவும் நாள்கணக்கிலோ அல்லது வார கணக்கிலோ அல்ல…

மாத கணக்கில் போராட்டங்கள் தலைநகர் டெல்லியை கொதிக்க வைத்தன. நடத்தப்பட்ட அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தைகளிலும் தோல்வி அடைந்தன. ஒரு கட்டத்தில் போராட்டங்களில் வன்முறை வெடிக்க அதன் பாதை மாறியது.

செப்டம்பர் 18ம் தேதி மத்திய அமைச்சர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார். டிசம்பர் 9ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெற்றது. மத்திய அரசின் எந்த விளக்கங்களும் எடுபட வில்லை.

இந் நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக அரசின் மீது கடும் விமர்சனங்களைமுன் வைத்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஒரு போக்கு இருக்கிறது. மத்திய அரசு எதை செய்தாலும் அதை எதிர்க்கும் போக்கு இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் எதை செய்தாலும் அதில் அரசியலை மையப்படுத்தி ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கவே இல்லை. 2 மாநிலங்கள் மட்டும் தான் எதிர்க்கின்றன. மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு எழவே இல்லை.

குறிப்பாக சொன்னால் தமிழகத்தில் இருக்கும் விவசாயிகள் இந்த சட்டங்களுக்கு எதிராக ஆதரவு தெரிவித்தனர். சட்டப்பேரவையில் மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். நேரத்தை வேஸ்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது விவசாயிகளுக்கு எதிரான தீர்மானம் ஆக தான் பார்க்கிறோம் என்று கூறி இருக்கிறார்.

சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றவுடன் மத்திய அரசுக்கு எதிரான போக்கை பல கட்டங்களில் கடந்து வந்திருக்கிறது. மத்திய அரசின் வேகத்தை விட தமிழக பாஜகவின் கருத்துகள் சரவெடியாக இருக்கின்றன.

மத்திய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வரும் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

தமிழக அரசின் நலத்திட்டங்கள் பற்றிய அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக செயலாளர் எழுதிய கடிதம் பெருமளவு பேசப்பட்டது. அப்போது ஆளுநர் அறிக்கை கேட்பது வழக்கமான ஒன்று திமுக பதிலளித்தது.

ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் இந்த வாதத்தை ஏற்க மறுத்ததோடு, ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனமும் தெரிவித்தன். இப்படிப்பட்ட தருணத்தில் தமிழக அரசின் மீது மத்திய இணை அமைச்சர் குற்றம்சாட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.