அமைச்சர் கே.சி.வீரமணி  சாதரண நபர் போல புல்லட்டில் சென்று தனது ஊர் மக்களிடம் குசலம் விசாரித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்த ஊர் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, இடையம்பட்டியில் உள்ள காந்தி நகர். 1993 ஆம் ஆண்டு அ.தி.மு.கவில் சேர்ந்த இவர் தற்போது வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜோலார் பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013 ல் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வென்று வணிகவரித்துறை மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில் டி.என்.83 டி 7799 என்கிற பதிவெண் கொண்ட புல்லட்டில் அவரது சொந்த ஊருக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று பலரிடமும் நலம் விசாரித்தார். டி.சர்ட், புல்லட்டில் வந்த அவரை பருக்கும் அடையாளம் தெரியவில்லை. பிறகு அவரை அடையாளம் தெரிந்து கொண்ட மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.