ராணுவ வீரர் சடலத்துக்கு முன் செல்ஃபி எடுத்த விவகாரத்தில் தன்னை வலைதளங்களில் விமர்சித்தவர்களைக் கைது செய்து சிறையிலடைக்கவேண்டும் என்றும் வலைதளங்களில் வெளியான படங்கள் செல்ஃபியே அல்ல என்றும் மத்திய அமைச்சர் கண்ணன் தானம் கேரள போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறைஅமைச்சராக அல்போன்ஸ் கண்ணன்தானம் இருக்கிறார்.  புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய மரியாதையுடன் உடலை அடக்கம் செய்து வந்தன.

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், திரிகைபேட்டா கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற சிஆர்பிஎப் வீரரும் மரணமடைந்தார். அவரின் உடல் விமானம் கொண்டுவரப்பட்டு, அவரது  சொந்தகிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த இறுதிச்சடங்கின் போது, வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர் வசந்தகுமாரின் உடலுக்கு முன் நின்றுகொண்டு மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்ஃபிஎடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். வீரர் உடல் முன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட மத்திய அமைச்சர் அல்போன்ஸின் செயலை கடுமையாக விமர்சித்து வந்தனர். இச்செயலுக்கு மிகவும் தாமதமாக ரியாக்ட் செய்திருக்கும் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட படம் யாரோ ஒருவரால் எடுக்கப்பட்டது என்றும் அதை வலைதலங்களில் வைரலாக்கியவர்களைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றும் கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார்.

இப்புகாரைக் கண்டும் அஞ்சாத வலைதளவாசிகள்’ அப்படின்னா அந்த போட்டோவை உங்க முகநூல் பக்கத்துல அப்டேட் பண்ணுன உங்க அட்மினைத் தூக்கி முதல்ல உள்ள போடுங்க. மத்தத அப்புறம் பாக்கலாம்’ என்று கமெண்ட் அடித்துவருகின்றனர்.