கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் இன்று தொடங்கின. இந்நிலையில், சென்னை ஒமந்தூரார் மருத்துவ கல்லூரியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில்;- 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் 7 பேர் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்ட நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் எதுமில்லை. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் எந்த நோயும் வராது என்றார்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.