Asianet News TamilAsianet News Tamil

ரஜினி , ரசிகர்களை சந்திப்பது சடங்கு..!! மக்களை சந்திக்கட்டும் பிறகு பார்க்கலாம்... அமைச்சர் சொன்ன அதிரடி..!!

அந்த நோய்கள் பரவாமல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவே தமிழகத்தில்  திரையரங்குகளை  மூட வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

minister kadambur raju criticized rajini politics  and not bother about his fans meeting
Author
Chennai, First Published Mar 13, 2020, 5:16 PM IST

அதிமுகவுக்கு யாரும் எப்போதும்எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார் .  பாஜக கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே ஜி.கே வாசனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கியது என கூறப்பட்டு வந்த நிலையில் ,  அமைச்சர் ராஜு இவ்வாறு  விளக்கமளித்துள்ளார் .  அதேபோல் நடிகர் ரஜினிகாந்த்  நற்பணி மன்ற ரசிகர்களைதான் சந்திக்கிறாரே  தவிர அவர் ஒன்றும் மக்களை சந்திக்கவில்லை என  கூறினார். அமைச்சர் கடம்பூர் ராஜு  இன்று காலை  கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,   நடிகர் ரஜினிகாந்த் குறித்து தற்போது பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகிறது .

minister kadambur raju criticized rajini politics  and not bother about his fans meeting 

அவர் 1996 ஆம் ஆண்டிலிருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் ,  ஆனால் அவர் இன்னும் மக்களை சந்திக்கவே இல்லை ,  25 ஆண்டுகளாக ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் என்றார் .  ஜி கே வாசனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ,  முதல்வர் துணை முதல்வர் கலந்து பேசித்தான் வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கினர் அதேபோல் யாரும் யாருக்கும் நெருக்கடி கொடுக்க முடியாது .  எந்த நிலையிலும் எந்தக் கட்சியின் நெருக்கடிக்கும் அதிமுக ஆளானது கிடையாது என்றார் . கடந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது .   தற்போது தாமகவுக்கு வழங்கியுள்ளது . இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால் மற்றொரு கூட்டணிக் கட்சிக்கு வழங்குவோம் என்றார். 

minister kadambur raju criticized rajini politics  and not bother about his fans meeting

அதேபோல் கொரோனா  வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் ஈரான் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் .  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆரம்பக்கட்டத்திலேயே தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற அவர்,  இதனால் அந்த நோய் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அந்த நோய்கள் பரவாமல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவே தமிழகத்தில்  திரையரங்குகளை  மூட வேண்டிய அவசியம் இல்லை  என்றார் . 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios