Asianet News TamilAsianet News Tamil

ரூ.5,000 கொரோனா நிவாரணத் தொகை... வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் அதிரடி அறிவிப்பு..!

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைகளுக்கு செல்லாமல் அன்றாட வாழ்க்கை நடத்த கஷ்டப்பட்டு வருகின்றனர்.

Minister Jeyakumar's Action to Pay Rs. 5,000 Corona Relief
Author
Tamil Nadu, First Published Apr 30, 2020, 6:13 PM IST

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலைகளுக்கு செல்லாமல் அன்றாட வாழ்க்கை நடத்த கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆகையால் அவர்களுக்கு அரசு, மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் நிவாரணங்களை அளித்து வருகிறது. Minister Jeyakumar's Action to Pay Rs. 5,000 Corona Relief

தமிழக அரசு சார்பில் ஏப்ரல் மாதத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான நிவாரணத்தொகையையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின்(E.S.I)கீழ் பதிவு பெற்ற 21,770 தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.177 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   Minister Jeyakumar's Action to Pay Rs. 5,000 Corona Relief

இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நலவாரிய உறுப்பினர்களாக உள்ள மீனவர்களுக்கு ரூ.1000 சிறப்பு நிவாரணம் இன்று முதல் வங்கியில் செலுத்தப்பட்டு வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அறிவித்துள்ளார்.  திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவ மக்களுக்கு வழங்கப்படுகிறது; கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதி மீனவ குடும்பங்களுக்கு ஜூன் முதல் வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios