சமூக வலைதளங்களில்  தன் சொட்டைத் தலையை வைத்து மீம்ஸ் போட்டவரை பாராட்டித் தள்ளிய அமைச்சர் ஜெயகுமார் அதனை தான் ஜாலியாக எடுத்துக் கொண்டதாகவும் கூறி அரங்கத்தையே சிரிப்பால் அதிர வைத்தார்.

அன்றாட அரசியல், சினிமா, அன்றன்று நடைபெறும் சம்பவங்கள்  என அனைத்தையும் வைத்து  மீம்ஸ் கிரியேட் பண்ணுவதில் நம்ம  ஊர் நெட்சன்கனை மிஞ்ச ஆளே கிடையாது. அந்த அளவுக்கு இவர்தான் என்று இல்லாமல் எல்லோரையும் கலாய்த்து வருகிறார்கள்.

அதுவும் , தமிழக அமைச்சர்களை கலாய்க்கும் மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்  நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர், அதில் அதிகம் அடிபடுபவர்கள் என்றால் அமைச்சர் ஜெயகுமார், தமிழிசைஇ எஸ்.வி.சேக்ர், எச்.ராஜா போன்றோர்தான்.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தன்னைப் பற்றி ஊடகங்களில் வரும் மீம்ஸ்களை சொல்லிக் காட்டி அனைவரையும் சிரிக்க வைத்தார்.

அண்மையில் அமைச்சர் ஜெயகுமார் குறித்து வெளியான மீஸ்ஸ் குறித்துக் பேசிய அவர், இது தன் தலையை கிண்டல் செய்வது போல் அமைந்திருந்தாலும் அதை விரும்பி ரசித்ததாக தெரிவித்தார். ரூம் போட்டு யோசித்து இது போன்ற மீம்ஸ்களை உருவாக்குவார்களோ என அவர் கேட்க அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.

மேலும் அந்த மீம்ஸை சுட்டிக்காட்டி உங்களால் யூகிக்க  முடிகிறதா என்றும்  கேட்டு,  சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால், என்ற பாட்டையும் பாடிக்காட்டி  அனைவரையும் சிரிக்க வைத்த அமைச்சர் ஜெயகுமார் இ ந்த மீம்ஸ்சை  தானே சமூகவலைத்தளத்தில் பரப்பியதாகவும் தெரிவித்தார்.