minister jayakumar retaliation to stalin criticize on admk

அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு ஆபத்து என்ற ஸ்டாலினின் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ஆபத்து என்று ஸ்டாலின் விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஸ்டாலினின் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த விமர்சனத்தை ஸ்டாலின் கண்ணாடி முன் நின்று தான் கூற வேண்டும்.

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அனைவருக்கும் பரிபூரண சுதந்திரம் உள்ளது. திமுக ஆட்சியில் தான் தமிழகம் ஆபத்தில் இருந்தது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் தங்களது உறவினர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, நிலங்கள் வாங்குவது-விற்பது ஆகிய விவகாரங்களில் தலையிடுவது, திரைப்படங்களை அவர்களே வாங்கிக்கொள்வது, படம் ரிலீசாகும் தேதியை முடிவு செய்வது என திமுக ஆட்சியில் தான் தமிழகம் ஆபத்தில் இருந்தது. 

திமுக ஆட்சியில் செய்தியாளர்களால் இந்தளவிற்கு சுதந்திரமாக கேள்வி கூட கேட்கப்பட முடியாது. ஆனால் அதிமுக ஆட்சியில் அப்படி எல்லாம் கிடையாது என ஸ்டாலினின் விமர்சனத்துக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார்.