Asianet News TamilAsianet News Tamil

ரஜினி, கமல் சேர்ந்தாலும் கவலையில்லை... அதிமுக சிங்கிளாக எதிர்த்து நிற்கும்... ரஜினிக்கு ஜெயக்குமார் கூல் பதில்!

 ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் சரி, தனித்து இருந்தாலும் சரி அதைபற்றியெல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. கருணாநிதி போன்ற ஜாம்பவான்களைக் கண்ட கட்சி அதிமுக. ரஜினி, கமல் போன்றவர்கள் எல்ல்லோரும் எங்களுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே.  

Minister Jayakumar reply to rajini
Author
Chennai, First Published Nov 19, 2019, 10:40 PM IST

ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமலோடு சேர்ந்து விஜய்யும் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்த்து நிற்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.Minister Jayakumar reply to rajini
 ‘கமல் 60’ விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், ‘ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவது தமிழகத்துக்கு நல்லது’ என்று தெரிவித்தார். ஏற்கனவே கமலும் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  நடிகர் ரஜினி, “தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம்” என அதிரடியாகத் தெரிவித்தார்.

Minister Jayakumar reply to rajini
இதன்மூலம் ரஜினியும் கமலும் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம் என்று ரஜினி கூறிய கருத்துப் பற்றி தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 Minister Jayakumar reply to rajini
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் சரி, தனித்து இருந்தாலும் சரி அதைபற்றியெல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. கருணாநிதி போன்ற ஜாம்பவான்களைக் கண்ட கட்சி அதிமுக. ரஜினி, கமல் போன்றவர்கள் எல்ல்லோரும் எங்களுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே.  ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமலோடு சேர்ந்து விஜய்யும் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்த்து நிற்கும். 2021-ம் ஆண்டிலும்  நிச்சயம் அதிமுக ஆட்சிதான் அமையும்” என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios