உலகக்கோப்பையில் இங்கிலாந்து எப்படி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றதோ அதேபோல் வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

பெருந்தலைவர் காமராசரின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின், வளர்மதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கல்விக்காகவும், தமிழுக்காகவும் உழைத்தவர் பெருந்தலைவர் காமராஜ் என புகழாரம் சூட்டினார். உலகப்கோப்பையில் இங்கிலாந்து தோற்பது போல் ஒரு தோற்றம் இருந்தது, ஆனால் நியூசிலாந்து தோற்றுவிட்டது அதேபோல் அரசியலில் திமுக ஜெயிப்பது போல் மாயை இருந்தாலும் இறுதியில் இங்கிலாந்தை போல் அதிமுக வெல்லும். நியூசிலாந்து போல திமுக தோற்கும் என அவர் குறிப்பிட்டார்.