Asianet News TamilAsianet News Tamil

கள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..!! தூள் கிளப்பிய அமைச்சர்..!!

மதுக்கடைகளை ஒரே நாளில் மூடிவிட்டால் கள்ள சாராயம் என்பது உருவாகும் என்றும், படிப்படியாக மூடப்படும் என்றும் கூறினார். 7 பேர் விடுதலையில் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து விவாதம் செய்ய கூடாது எனவும், ஆளுனர் மாளிகையில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை என்றார். 

minister jayakumar explanation about tasmac functioning for what
Author
Chennai, First Published Oct 22, 2019, 3:12 PM IST

7 பேர் விடுதலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் தான் அரசு உள்ளது எனவும், ஆளுனர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.  சென்னை பசுமைவழிச்சாலை யஅல் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் பணி ஓய்வு காலம் ஆலோசனைகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகளை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், minister jayakumar explanation about tasmac functioning for what

அரசு பணியில் ஓய்வு பெற்ற பின் தன்னம்பிக்கை உடன் இருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆனால் மதுவே கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம் என்றார். தேர்தல் விதிமுறை அமல்படுத்தும் போது அனைவரும் அதனை பின்பற்ற வேண்டும். எனவே அந்த விதிமுறையை மீறி வசந்தகுமார் எம்.பி சென்றது தவறு தான். மதுக்கடைகளை ஒரே நாளில் மூடிவிட்டால் கள்ள சாராயம் என்பது உருவாகும் என்றும், படிப்படியாக மூடப்படும் என்றும் கூறினார். 7 பேர் விடுதலையில்
குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து விவாதம் செய்ய கூடாது எனவும், ஆளுனர் மாளிகையில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வஅறிவிப்பு ஏதுமில்லை என்றார். 

minister jayakumar explanation about tasmac functioning for what

மேலும் ஜெயலலிதா 7 பேர் விடுதலையில் எடுத்த நிலைப்பாடு தான் தற்போதும் என்ற அவர், ஆளுநரை அரசு வற்புறுத்த முடியாது, தொடர்ந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நிலை என்றும், ஆளுனர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்றார். இந்தியை திணிக்க கூடாது என்றும், கூட்டாட்சி தத்துவத்தில் மொழி திணிப்பு இருக்க கூடாது என்றார். அதுமட்டுமின்றி பிரதமர் தமிழ் மீது அதிகம் பிரியம் கொண்டவர் என்றும், தமிழ் தொன்மை வாய்ந்த மொழி என்பதை மத்திய அரசும் உணர்ந்து இருக்கிறது. எனவே இதில் மத்திய அரசு நல்ல முறையில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். 

minister jayakumar explanation about tasmac functioning for what

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். கடந்த தேர்தலில் திமுக பணத்தை வாரி கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணியது. அதேபோல் தான் இந்த முறையும் முயற்சி செய்தது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து அதிமுக வெற்றி அடையும் என்றும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios