minister jayakumar challenge to kamal haasan

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதிமுக அரசை விமர்சிக்கும் கமல், தைரியம் இருந்தால் திமுகவை விமர்சிக்கட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு தொடர் எழுதிவரும் கமல், ஆர்.கே.நகரில் ஆளும் தரப்பும் சுயேட்சை தரப்பும் போட்டி போட்டு கொண்டு வாக்காளர்களின் தலைக்கு விலை நிர்ணயம் செய்தனர். அதில், அதிகவிலை நிர்ணயித்த சுயேட்சை வெற்றி பெற்றுவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு ஆகப்பெரிய ஜனநாயக அசிங்கம் என கமல் விமர்சித்து எழுதியிருந்தார்.

கமலின் விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கமல் விமர்சித்து வருகிறார். அவருக்கு தைரியம் இருந்தால் திமுகவையோ தினகரனையோ விமர்சிக்கட்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், மக்களை நம்பியே ஆட்சியும் ஆட்சியாளர்களும் உள்ளோமே தவிர பணத்தை நம்பியில்லை. 10000 தருவதாக கூறி கடன் பெற்று வெற்றி பெற்ற தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் தேடிவருகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.