ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானது நம் தமிழக போலீஸ். எனவே தீவிரவாதிகள்  ஊடுருவி இருப்பதாக வரும்  தகவல் குறித்து பொதுமக்கள் அஞ்சவேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார்  தைரியம் தெரிவித்துள்ளார்.  தன்னை ஜொக்கர் என்று கூறியிருந்த ஸ்டாலினுக்கும் அப்போது அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் நிகழ்வு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.  இந்த கருத்தரங்க  நிகழ்வில் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அப்போது  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் .ஸ்கார்ட்லாந்து போலீசுக்கு இணையாக தமிழிக  போலீஸ் செயல்பட்டு வருகிறது. அதனால் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வரும் தகவல் குறித்து பொதுமக்கள் அஞ்சத் தேவை இல்லை.  தமிழகம் முழுவதும் காவல் துறையினர் அதிக விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் என்றார். ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை  சி.பி.ஐ அதிகாரிகள் சுவர்  ஏறி குதித்து கைது செய்யவேண்டிய நிலைக்கு தள்ளியது சிதம்பரம் தான் என்று அவர் விமர்சித்தார். அவருக்கு பயமில்லை என்றால் நேரிடையாக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியதானே என்று அவர் கேள்வி  எழுப்பினார்

சிதம்பரத்தால் இந்தியாவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் அவர் ஒரு நன்மையும் செய்யவில்லை.யாருக்கும் ஏதும் செய்யாதவர் அவர், அதனால் தான் அவரின் நிழல் கூட இன்று அவரை திரும்பி பார்க்கவில்லை, என்று தெரிவித்தார். உங்களை ஜோக்கர் என  ஸ்டாலின்   கூறியுள்ளாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜோக்கர் இல்லாமல் சீட்டாடம் மட்டுமல்ல அரசியல் ஆட்டமே இல்லை, ஜோக்கர் சிரிக்க வைப்பான் சிந்திக்க வைப்பான் ஆனால் ஸ்டாலின் சந்தி சிரிக்க தான் வைப்பார். அவர் ஒரு அரசியல் புரோக்கர். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் ஸ்டாலின். அரசியலில் ஆரோக்கியமாக விவாதம் ஏற்பட தான் செய்யும், அதற்கு பதில் கருத்து தெரிவிப்பவர் தான் சிறந்த தலைவர் என்று தெரிவித்தார்.