சென்னையில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது என கூற, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மருத்துவம் படித்த டாக்டரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று சென்னை மாதாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக குறைந்து வருகிறது. அரசு எடுக்கிற நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். நாள் ஒன்றுக்கு 509 காய்ச்சல் முகாம் நடத்துகிறோம், அதில் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்கிறோம்.மைக்ரோ அளவில் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம், சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. சிகிச்சை முடிந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா குறித்து சமூதயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிப்போம். அமைச்சர்கள் கலந்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கலந்து கொள்ளாத நிகழ்ச்சியாக இருந்தலும் சரி, அங்கு சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிப்போம். 

இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் நாம் மற்றவர்களுக்கு முன்னோடி, ஆகையால் வருகின்ற இயற்கை இடர்பாடுகளை சந்திக்க தயாராக உள்ளோம். மக்கள் தேவையான பொருட்களை அனைவரும் ஒரே நாளில் சென்று வாங்காமல், தேவையானபோது மொத்தமாக வாங்கி கொள்ள வேண்டும்.ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பலன் கிடைத்துள்ளது. நோய் தொற்றின் தாக்கம் குறைந்து வருவது நல்ல பலன், அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும். மின்கட்டண விவகாரம் குறித்து மின்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்த பின்பும் போரட்டம் நடத்துவது அரசியல் திசைதிருப்பம் முயற்சியாகவே உள்ளது. கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக தான் இந்த கருப்பு கொடி போராட்டம். தமிழகத்தை பொறுத்த வரை இது மத நல்லிணக்க அரசு, 

கலவரம் உருவாக்க நினைப்பவர்களுக்கு இங்கு இடம் கிடையாது திமுகவினர் பல்வேறு இடங்களில் நிதி திரட்டி தான் நலத்திட்டங்களை வழங்குகின்றனர். மாதவரம் தொகுதியில் இதுவரை திமுக சட்டமன்ற உறுப்பினர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, சமூக பரவல் என்பதை மருத்துவக்குழு சொ்ல வேண்டிய ஒரு விஷயம், அரசியல் கட்சி தலைவர் சொல்ல வேண்டிய விஷயமா? திமுக தலைவர் ஸ்டாலின் community medicine படித்த டாக்டரா? கொத்து கொத்தாக பரவினால் தான் அது சமூக பரவல் அப்படி பரவாமல் தடுத்த வயிற்று எரிச்சலில் கூறுகிறார்.மருத்துவக்குழு சமூக பரவல் என கூறினால் தான் முதல்வர் சொல்ல முடியும், மருத்துவ குழுவே சமூக பரவல் இல்லை என கூறுகிறது. என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.