ஸ்டாலின் வரும் நேரம்… மக்கள் மறியல்... காரை ரிவர்ஸ் எடுத்து ஓட்டம் பிடித்த பெண் அமைச்சர்… வைரல் வீடியோ...

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல்வர் வரும் நேரத்தில் மக்கள் சாலை மறியலில் இறங்க அமைச்சர் கீதாஜீவன் கார் வந்த வழியே யுடர்ன் அடித்து திரும்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

Minister geetha jeevan car u turn while people protest

தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல்வர் வரும் நேரத்தில் மக்கள் சாலை மறியலில் இறங்க அமைச்சர் கீதாஜீவன் கார் வந்த வழியே யுடர்ன் அடித்து திரும்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

Minister geetha jeevan car u turn while people protest

தென்மாவட்டங்களில் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை மழை புரட்டி எடுத்து இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த மழை மக்களை பாடாய்படுத்தியது.

இதையடுத்து, மழை, வெள்ள பாதிப்புகளை நேரிடையாக பார்வைவிட்டு பணிகளை துரிதப்படுத்தும் வகையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் முகாமிட்டு இருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகைகக்காக கட்சியினர் காத்திருந்தனர். அவரை வரவேற்றனர்.

Minister geetha jeevan car u turn while people protest

ஆனால் முதல்வரின் தூத்துக்குடி நிகழ்ச்சியின் போது அமைச்சர் கீதா ஜீவன் வெள்ள பாதிப்பை கண்டறிய சென்ற போது ஏற்பட்ட சம்பவம் ஒன்று இப்போது வீடியோவாகி  இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

அமைச்சர் கீதாஜீவன் நேற்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றுள்ளார். அதே நேரம் முதல்வர் வருகையை அறிந்த முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர் உள்ளிட்ட தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல பகுதிகளில் வாரக்கணக்கில் தண்ணீர் தேங்கி இருந்திருக்கிறது.

எவ்வளவோ முறையிட்டும் எந்த நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ளாத நிலையில், மக்கள் நேரடியாக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சாலை மறியலில் குதித்தனர். அப்போது அதே சாலையில் அமைச்சர் கீதா ஜீவன் விசிட் அடிக்க சென்றிருக்கிறார்.

திருச்செந்தூர் சாலையில், சிவந்தாகுளம் என்ற பகுதியில் பல நாட்களாக தேங்கியிருந்த வெள்ளத்தை அகற்ற நடவடிக்கையே எடுக்கப்படவில்லை. அமைச்சர் கார் வருகையின் போது அங்கு மக்கள் திரண்டு சாலை மறியலில் இறங்கினர்.

Minister geetha jeevan car u turn while people protest

இந்த போராட்டம் நடைபெற்ற பகுதியில் வந்த அமைச்சர் கார், சிறிது தூரத்துக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் கார் வருகிறது, அப்படியே உட்காருங்கள் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

மக்களின் போராட்டம் அறிந்து தொலைவிலேயே நின்ற கார் சிறிதுநேரம் அங்கேயே நிறுத்தப்பட்டு பின்னர் வந்த வழியே யுடர்ன் அடித்து திரும்பி சென்றது. அமைச்சர் கீதா ஜீவன் பின்னால் வந்த கார்களும் யுடர்ன் அடித்து பறந்தன.

"

இந்த வீடியோவை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இணைய தளங்களில் வெளியிட்டு உள்ளனர். மக்கள் போராடிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அமைச்சராக இருந்தும் கேட்காமல் வந்த வழியே காருடன் கீதா ஜீவன் பறந்தது கண்டு மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் மறு பக்கம்… வீடியோ சமூக வலைதளங்களில் சக்க போடு போடுகிறது….!!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios