கோவையில் நகர்ப்புற வாழ்விட குடிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், அங்காங்கே குப்பைகள் கிடந்ததை கண்டு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். மேலும் அடுத்த முறை வரும் போது, இது போன்று இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
கோவையில் நகர்ப்புற வாழ்விட குடிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், அங்காங்கே குப்பைகள் கிடந்ததை கண்டு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டார். மேலும் அடுத்த முறை வரும் போது, இது போன்று இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
கோவை மாவட்டம் உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஊரக தொழில்துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பார்வையிட்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது புதிய பிளாக்குகளில் கான்கிரீட் பில்லர்கள் கோணாலாக இருப்பதை கண்ட அமைச்சர், அதிகாரிகளை அழைத்து கண்டித்தார்.
மேலும் படிக்க: ஆதினத்தை அண்ணாமலை தோளில் சுமக்கட்டும்.. உழைக்கும் மக்கள் சுமப்பதை ஏற்க முடியாது.. திருமாவளவன் பொளேர்.!
அமைச்சர் திடீர் ஆய்வு:
இதனிடையே அங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை சந்தித்து, அவர்களில் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் போதிய அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ளதாக என்பதை ஆய்வு செய்த அமைச்சர், வரிசையாக டிரம், மோட்டார் இருப்பதை கவனித்தார்.அதன் மூலம் மோட்டார் வைத்து குடிநீர் பம்ப் செய்து, வீட்டுக்குள் கொண்டு செல்வதை பார்வையிட்டார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, ”மேல் தளத்தில் தண்ணீர் தொட்டி கட்டி, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு கொடுத்து விட வேண்டும் என்றும் மக்கள் ஏன் தண்ணீருக்காக இவ்வளவு சிரமம் பட வேண்டும் என்றும் கோபத்துடன் கண்டித்தார். குடிருப்பு வளாகம் முழுவதும் குப்பை பரவி கிடப்பதை பார்த்த அமைச்சர், கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கட்டிடங்கள் கட்டிகிறோம்.
அதிகாரிகளுக்கு டோஸ்:
ஆனால் இதனை பாரமரிப்பதில் அக்கறை செலுத்தாமல் மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்கிறார்..? என்று கேள்வி கேட்டார். மக்கள் வசிக்கும் பகுதிகள் புதர் மண்டிக் கிடக்கிறது. அடுத்த முறை வரும் போது இந்த மாதிரி இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டோஸ் விட்டார். மேலும் போர்வெல் அமைத்து, 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கினாலும், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
அதன்பின், புதிதாக கட்டப்பட்ட 'டோபிகானா' வுக்கு சென்ற அமைச்சர், சலவை தொழிலாளர்களின் குடும்பத்தினரின் தேவைகளை கேட்டறிந்தார். துணியை இஸ்திரி போடுவதற்கு கூடாரம் அமைத்துக் கொடுக்க வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதியளித்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், வாழ்வாதார மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் ராஜசேகரன், நிர்வாக பொறியாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் படிக்க: தேர்வு மையத்தில் மின் வெட்டால் மாணவர்கள் பாதிப்பு...! மதிப்பெண் குறைய வாய்ப்பு..?அல்ர்ட் செய்யும் ஓபிஎஸ்
