தமிழக சட்டசபையில் நடைபெற்ற மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, பால்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக  உறுப்பினர் கே.பி.பி.சாமி பேசினார். 

அப்போது பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவே இல்லை. அதை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்..

இதற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  நாங்கள் பால் விலையை உயர்த்துவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் நீங்கள் போராட்டம் செய்யாமல் இருந்தால் போதும் என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் பால் விலையை உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தும் போது, நுகர்வோருக்கும் உயர்த்தி தானே ஆக வேண்டும். 

பால் உற்பத்தியாளர்களுக்கு அந்த விலையை உயர்த்தி கொடுக்கின்றபோது, அதற்கேற்றவாறு நுகர்வோருக்கு கட்டணம் உயரும் என அதிரடியாக தெரிவித்தார்.