பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ராணுவத்துக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அதி முக்கியத்தவம் கொடுத்து வருகிறது. ராணுவ வீரர்களுக்கு  நல்ல ஊதியம் மற்றும் பணிக்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக  அல்லும் பகலும் பனியிலும், குளிரிலும் பாடுபட்டு வரும் நம் ராணுவ வீரர்களுக்கு என்ன கொடுத்தாலும் தகும். சில நேரங்களில் நம் வீரர்கள் நம் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தனது பிறந்த நாளின் போது நம் ராணுவ வீரர்களுக்கு அன்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

அதன்படி CRPF,BSF,CISF,ITBP மற்றும் இதர பிரிவைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் ராணுவ வீரர்கள் இனிமேல் ஒரு  ஆண்டுக்கு  100 நாட்கள் தங்களுடைய குடும்பத்துடன் சேர்ந்து இருக்கலாம் என அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இது ராணுவ வீரர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் அறிவிப்புக்கு பொது மக்களும் வாழ்த்து தெரிவிதுள்ளனர். தேசத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் உன்றையே குறிக்கோளாக கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவின் பரிந்துரைகளை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளர்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370 பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்  யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் நான்கரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

உயர்த்தப்பட்ட புதிய ஊதியம் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லதாக் யூனியன் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும்.