எம். ஜி.ஆர் வாழ்த்திய 2 சிறுமிகள்..! ஒருவர் ஆளுநர்...! இன்னொருவர் மக்களவை எம்.பி..! தெரியுமா இந்த சங்கதி..! 

திமுக எம்பி கனிமொழி அவர்கள் சிறுவயதாக இருக்கும்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன் கையில் தூக்கி வைத்தவாறு உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனும் சிறுவயதாக இருக்கும்போது தன் தந்தை குமரி அனந்தனுடன் கலைவாணர் அரங்கில் நடைபெறும் பல்வேறு அரசியல் சார்ந்த கூட்டத்திற்கு சென்று தலைவர்கள் பேசும் பேச்சை  தொடர்ந்து கவனித்து வருவாராம்.

அப்போது எம்ஜிஆர் தமிழிசையை அழைத்து உன் தந்தையை போல் நீயும் அரசியலில் பெரும் தலைவராக வரவேண்டும் என வாழ்த்து கூறி ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.இந்த நிலையில் கனிமொழி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் என்ன ஒரு ஒற்றுமை என்றால் கனிமொழி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இவர்கள் இரண்டு பேருமே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தற்போது மிக உயரிய பதவியான தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகமொத்தத்தில் எம்ஜிஆர் வாழ்த்திய இவ்விரு அரசியல் புள்ளிகளின் மகளும் இன்று  அரசியலில் பெரும் தலைவராக உருவெடுத்து உள்ளனர் என்பதற்கு இந்த இரு படங்களுமே சான்றாக அமைந்துள்ளது என்றால் யாராலும் மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது...! எம் ஜி ஆர் வாழ்த்து அப்படியோ...!