Asianet News TamilAsianet News Tamil

38 ஆண்டுகளுக்கு முன்பே 1 லட்சத்து 28,130 பேருக்கு அரசு வேலை கொடுத்த எம்.ஜி.ஆர்..!

மகளிருக்கு, அதுவும் ஆதரவற்ற பெண்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, முன்னுரிமை வழங்குகிற, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு உதவுகிற, இது போன்ற பணியமர்வுத் திட்டம், வேறு ஒன்று உள்ளதா...? சரி.. இந்தத் திட்டத்தின் 'பயன்' என்ன..? 

MGR which employed 1 lakh 28,130 people 38 years ago
Author
Tamil Nadu, First Published Jul 27, 2020, 10:34 AM IST

அதிமுகவும் தமிழ்நாடும்: உண்மைகள் சுடத்தான் செய்யும். 

இந்தத் தொடரில் நேர்மறைச் சிந்தனைகளை மட்டுமே முன்வைக்க விரும்புகிறேன். சில சமயங்களில் ஒப்பீட்டுக்காக (comparison) தி.மு.க. பற்றிக் குறிப்பிட வேண்டி வருகிறது. இல்லையேல், நம் கண் முன்னாலேயே பல உண்மைகள் புதையுண்டு போய் விடும். மற்றபடி, 'அரசியல்' கலவாத அரசியல் கட்டுரை இது! உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். MGR which employed 1 lakh 28,130 people 38 years ago

எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் டவுன் பஸ் அறிமுகம் ஆனது; இவை அனைத்தும், குறைந்த கட்டணத்தில் இயங்கிய அரசு பஸ்கள். அதனால், கிராமப்புற மாணவர்கள், பக்கத்தில் இருந்த நகரங்களுக்குச் சென்று கல்லூரிப் படிப்பைத் தொடர முடிந்தது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்தான், நான் பட்டம் முடித்தேன். நான் பட்டப் படிப்பின் மூன்றாவது ஆண்டில் இருந்த போதுதான், டவுன் பஸ் அறிமுகம் ஆனது. அதற்கு முன்னர், பி.யூ.சி., மற்றும் பட்டப்படிப்பின் முதல் இரண்டு ஆண்டுகள் வரை, நாள்தோறும் குறைந்தது 12 கி.மீ. (இரு பக்கமும் - போக, வர) 'கால்நடை'தான்.  
 
விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் நான் படித்த வகுப்பில் மொத்தம் 50 பேர்.அதில் ஒருவர் அதே கல்லூரியில் பணி புரிந்த பேராசிரியரின் புதல்வர். மீதம் 49 பேர், நான் உட்பட, முதல் முறையாகக் கல்லூரி வாசல் மிதித்தவர்கள். அவ்வாண்டு அந்தக் கல்லூரியில் சுமார் 200 பேர் பட்டம் பெற்றனர். எனது நினைவு சரியாக இருக்குமானால், முன்னர் சொன்ன நண்பரையும் சேர்த்து, மூன்று பேரைத் தவிர்த்து மற்ற அனைவரும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்தாம்.MGR which employed 1 lakh 28,130 people 38 years ago

1977 தொடங்கி, 1980 களில், தமிழ்நாடு முழுக்க, வெளிவந்த முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அபரிமிதமானது. சாமான்யர்களின் வாழ்க்கையில் உயர்கல்வியைப் புகுத்தி, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வழி வகுத்தவர் எம்.ஜி.ஆர். இந்த சாதனைக்கு அவர்தான் சொந்தக்காரர். இதுபோன்ற நீண்டகால மக்கள் நலத் திட்டங்கள், அதிமுகவின் அடையாளங்கள். விதைத்து நீரூற்றி விருட்சமாக வளர்ந்த பின்னர், அதன் நிழலில் பூங்காக்கள் அமைத்து விளம்பரம் தேடுவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜனநாயகத்தில் அதற்கான முழு உரிமையும் எல்லாருக்கும் இருக்கிறது!

இனி, சத்துணவுத் திட்டத்துக்கு வருவோம்: 
சத்துணவுத் திட்டம் மூலம் ஏழைச் சிறுவர்களுக்கு ஊட்டச் சத்து நிறைந்த உணவு கிடைப்பதை உறுதி செய்தார் எம்.ஜி.ஆர். தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளம் 'Integrated Child Development Services' இவ்வாறு தெரிவிக்கிறது:  

Puratchi Thalaivar M.G.R. Nutritious Meal Programme was launched in Rural areas on 01.07.1982 and was further extended to Urban Areas from 15.09.1982. Every day hot cooked meal containing Rice, Dhal, Oil and Vegetables is provided to the children in the age group of 2 to 5+ years in Anganwadi centres. The noble objective of the scheme is to increase the literacy rate and eradicate malnutrition.MGR which employed 1 lakh 28,130 people 38 years ago

கிராமப்புறப் பகுதிகளில் 1982 ஜூலை முதல் தேதியும், நகர்ப்புறங்களில் 1982 செப் 15 அன்றும் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் புனித நோக்கம் (noble objective) - கல்வியறிவைப் பெருக்குதல் மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாட்டை நீக்குதல். 'ஒரே கல்லில் இரண்டுஅல்ல; மூன்று  மாங்காய்'. 'ஆளும் வளரணும்; அறிவும் வளரணும்; ஆரோக்கியமும் பெருகணும்'. இந்தியாவின் பிற மாநிலங்கள் தொடங்கி உலக நாடுகள் வரையில், வியந்து பாராட்டுகிற இந்தத் திட்டம் பற்றிப் பலரும் விரிவாகப் பேசி விட்டார்கள். 

நாம் இங்கே காண இருப்பது வேறு ஒரு கோணம்: 
சத்துணவுத் திட்டத்தின் மூலம் எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாயின..? இதனால் யாரெல்லாம் பயன் அடைந்தனர்..? இவர்களுக்கு எவ்வளவு சம்பளம்..? ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்த மாபெரும் திட்டமாக இதனை யாருமே இதுவரை பார்க்கவே இல்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. மீண்டும் தமிழக அரசின் அதிகார பூர்வ இணைய தளத்துக்குச் செல்வோம்' என்ன சொல்கிறது இத்தளம்..? 
 
Each Noon Meal Centre has three sanctioned posts of Noon Meal Organiser, Cook and Cook Assistant. But, if the number of Noon Meal beneficiaries in a school exceeds 500, an additional Cook Assistant can be appointed. 

ஒவ்வொரு மையத்திலும் 3 பேர் பணி புரிகிறார்கள். அமைப்பாளர்; சமையல்காரர்; சமையல் உதவியாளர். 
ஒருவேளை 500க்கு மேற்பட்ட சிறுவர் கொண்ட மையமாக இருந்தால்,கூடுதலாக ஒரு சமையற்காரர். தமிழ்நாடு முழுதும், தற்போது பணியில் உள்ளவர்கள் எத்தனை பேர்..? அமைப்பாளர்கள் - 42,423; சமையற்காரர் - 42,852; சமையல் உதவியாளர் - 42,855 மொத்தம் - 1,28,130 பேர். அமைப்பாளருக்கு மாத சம்பளம்: 10,045 - 14,770. சமையற்காரர்: 6265 - 7840; சமையல் உதவியாளர்: 5110 - 6160. 

MGR which employed 1 lakh 28,130 people 38 years ago
இணைய தளம் மேலும் கூறுகிறது: 
The Noon Meal Employees are also provided with Special Monthly pension, Lumpsum payment, Festival Advance, Pongal Bonus, Hill allowance and Winter allowance, Special Provident fund Gratuity Scheme, Additional Charge Allowance, Family Benefit Fund, New Health Insurance Scheme, General Provident Fund, Maternity Leave, Voluntary Retirement, Compassionate Ground appointment etc.,

பண்டிகை முன் பணம் தொடங்கி, கருணை அடிப்படையிலான பணியமர்வு வரை, அத்தனை உரிமைகள், சலுகைகளும் கொண்ட அரசுப் பணி!இப்போது 'டிகிரி' முடித்து விட்டு, 'வெளியில' போயி வேலை பார்க்கிற எத்தனை பேருக்கு, இந்த அளவு சம்பளம், பிற படிகள், அதுவும் பகுதி நேர வேலைக்குக் கிடைக்கிறது...?இது மட்டுமல்ல; தனது சொந்த ஊரில், தனது சொந்த பந்தங்களுடன்,  வீட்டுக்குப் பக்கத்திலேயே, அரசுப் பணி... எத்தனை பெரிய பேறு..? (‘Part Time Permanent Employees’ with working hours from 9 am to 2 pm.)

இது மட்டுமா..?. யாருக்கு இங்கே பணியமர்வில் முன்னுரிமை வழங்கப் படுகிறது..?இதோ பாருங்கள்: 
Only Women are employed in Noon Meal Programme. 25% is reserved for special categories like widows and destitute women in the posts under the Noon Meal Programme.4% is reserved for physically challenged persons for the post of Noon Meal Organiser.

மகளிருக்கு, அதுவும் ஆதரவற்ற பெண்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, முன்னுரிமை வழங்குகிற, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு உதவுகிற, இது போன்ற பணியமர்வுத் திட்டம், வேறு ஒன்று உள்ளதா...? சரி.. இந்தத் திட்டத்தின் 'பயன்' என்ன..? 

Impact of the ProgrammeThe implementation of the programme has brought a positive change on enrolment, retention and attendance of students in schools. It also enables education of girl children and improves the nutritional status of the children.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் நல்ல முன்னேற்றம், கல்வியறிவு பெறுகிற பெண் பிள்ளைகளின் சதவீதம் உயர்வு மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து மேலோங்குதல்... இத்தனையும் நிறைவேற்றிக் காட்டிய அற்புதத் திட்டத்துக்காகவே எம்.ஜி.ஆர். போற்றுதலுக்கு உரியவர் ஆகிறார். 'நிர்வாகம்' தெரியாது என்று கூவுகிற சிலருக்குத் தெரியாது - கிராம நிர்வாகத்தில் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த அதிரடி மாற்றம். அது என்ன..? MGR which employed 1 lakh 28,130 people 38 years ago

- கட்டுரையாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

(வளரும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios