மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது, எம்ஜி.ஆரால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது என்பதை யார் உணர்ந்தார்களோ இல்லையே பேரறிஞர் அண்ணா உணர்ந்திருந்தார். ஆனால், திரையுலகில், உச்சத்தில் இருந்த காரணத்தால் பணிவுடன் ஏற்க மறுத்தார். 

இதனால் புரட்சி தலைவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் அமைச்சர்பதவி கொடுத்து அழகு பார்த்தார் அண்ணா...  சுயமரியாதைக்காக இயக்கம் கண்டது தமிழ்நாடு. அருகம்புல்கள் ஆலமரமாக ஆசைப்படக் கூடாது... முடியவும் முடியாது. வெயிலைத் தாக்குப்பிடித்து, சூறைக்காற்றை மோதி தலை நிமிரை அந்த புற்கலுக்கு திராணி கிடையாது. அப்படித்தான் சில அரசியல் புற்கள் ஆகாய கோட்டை கட்டி அரியனைக னவில் மிதக்கின்றன.

 

கட்சியில் அரை நூற்றாண்டு காலம் ரன்னர் அப் ஆகவே இருந்துவிட்டார் ஒருவர். சொந்த கட்சியிலேயே வின்னர் போஸ்டிங் தராமல் இழுத்தடித்தார்கள். கருணாநிதி மறைவுக்கு பிறகு, கேப்டன் பொறுப்பு கொடுத்துள்ளார்கள். அதைவிடுத்து அதிமுகவோடு மோதி ஜெயிக்கலாம் என்ற கனவோடு இருக்கிறார். அய்யோ பாவம் என்றுசொல்வதை தவிர வேறு இல்லை என ஜெயக்குமார் கூறியுள்ளார்.