டாக்டர்.எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை கிண்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு
முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவிமரியாதை செலுத்தினர்.
மேலும் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த அஞ்சல் தலையையும் முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.
டாக்டர். எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி ஓராண்டுக்கு கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர்.
பன்னிர்செல்வம் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலையை தலைமை அஞ்சல் அலுவலர்.மூர்த்தி வெளியிட, அதனை
ஓபிஎஸ் பெற்றுக் கொண்டார்.
