Asianet News TamilAsianet News Tamil

மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை..!

meteorological department warning to tamilnadu fishermen
meteorological department warning to tamilnadu fishermen
Author
First Published Dec 5, 2017, 1:08 PM IST


தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இன்று முதல் டிசம்பர் 8 வரையிலான 4 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த 2 நாட்களாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்:

டிசம்பர்  8 வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரும். எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இன்று முதல் டிசம்பர் 8 வரையிலான 4 நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள், உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை வாய்ப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios