Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நிவாரணத்தை அள்ளிக் கொடுத்த வணிகர்கள் சங்கம்.. தொகை எவ்வளவு தெரியுமா.?

வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

Merchants Association donating corona relief .. Do you know the amount?
Author
Chennai, First Published Jun 15, 2021, 12:29 PM IST

வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கரோனா நிவாரண நிதி, 1.10 கோடி காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.  

Merchants Association donating corona relief .. Do you know the amount?

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, நலிந்த வணிகர்கள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் சுற்றுலாத் தளங்களில் உள்ள வணிகர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும்  செருப்பு, நகை கடைகள், துணிக்கடைகள், உள்ளிட்ட அனைத்துக் கடைகளையும் விரைவில் படிப்படியாக திறக்க வேண்டும் என்றும்,  இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் முதல்வரிடம் தெரிவித்ததாக கூறினார். 

Merchants Association donating corona relief .. Do you know the amount?

மேலும், வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதுமாக வணிகர்களுக்கு என்று தடுப்பூசிகளை முகாம்களை அமைத்து தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். மேலும் கலைஞர் அறிவித்த வணிகர் நல வாரியத்தை விரிவாக்கம் செய்யவும் ஜிஎஸ்டி அல்லாத வணிகர்களை சங்க பிரதிநிதிகளாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பாதிக்காத வண்ணம் வணிகர்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தமிழக அரசு மக்களுக்கு காய்கறி விநியோகத்தை வீடுவீடாக செய்து மக்களுக்கான நெருக்கடிகளை தவிர்த்தது. 

Merchants Association donating corona relief .. Do you know the amount?

அதற்கு முக்கிய மூலகர்த்தராக இருந்தவர் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆவார். இந்நிலையில் அவர் முதல்வரிடம் வைத்த கோரிக்கையை முதல்வர் கட்டயம் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios