Asianet News TamilAsianet News Tamil

எங்களோட அனுமதி இல்லாமல் ஒப்புதல் வழங்கக்கூடாது... மத்திய அரசுக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதிய முதல்வர்..!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் தமிழக அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

mekedatu dam issue...Edappadi palanisamy letter
Author
Tamil Nadu, First Published Jul 10, 2019, 6:40 PM IST

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் தமிழக அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். mekedatu dam issue...Edappadi palanisamy letter

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் மற்றும் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜூலை 19-ம் தேதி நடைபெறும் சுற்றச்சூழல் மதிப்பீட்டுக்குழு கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 mekedatu dam issue...Edappadi palanisamy letter

மேலும், கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், தொடக்கம் முதலே தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, மேகதாது அணைக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு அளித்த மனுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios