Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவுக்கு மருந்து மாத்திரைகள் தயார்...!! 3 மாதம் ஆனாலும் கவலை இல்லை...!!

குரோனோ பரவாமல் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது .  இது தொடர்பான தடுப்பு மருந்துகள் உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது . 

medicine have for corona virus , have storage for 3 month's
Author
Delhi, First Published Mar 6, 2020, 7:19 PM IST

குரோனோ பரவாமல் தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது .  இது தொடர்பான தடுப்பு மருந்துகள் உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது .  உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்க தொடங்கி உள்ளது . இந்நிலையில் மத்திய அரசு  வேகவேகமாக தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது .  இந்நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள்  தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்பட்டது . 

medicine have for corona virus , have storage for 3 month's

ஆனால் போதுமான மருந்து கையிருப்பு இருப்பதால் தட்டுப்பாடு இல்லை என மத்திய ரசாயன மந்திரி சதானந்த கவுடா கூறியுள்ளார் ,  அகமதாபாத்தில் நடந்துவரும் சர்வதேச மருத்துவத்துறை கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள அவர்  இதைக் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் நிலைமையை கண்காணிக்க மந்திரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது . அவர்கள் தினமும் இதை கண்காணித்து வருகிறார்கள் . நோய் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து வகையான தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான தடுப்பு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் போதுமான அளவு இருப்புவைக்கப்பட்டுள்ளது

medicine have for corona virus , have storage for 3 month's

மருந்து நிறுவனங்களும் அவற்றை தொடர்ந்து தயாரித்து வருவதாகவும் ,  மூன்று மாதங்களுக்கு எந்த தட்டுப்பாடு வராது அதேபோல் மற்ற நோய்களுக்கான மருந்துகளும் போதுமான அளவு இருப்பு இருக்கிறது .  அத்துடன் கொரோனா நோய் தாக்குதல் தொடர்பாக மக்கள் பீதியடைய வேண்டாம் ,  அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமோ அது அனைத்தையும் விரிவாக செய்திருக்கிறோம் ,  இது நமக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் ஆகும் ,  சவாலை முறியடிக்க எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார் .
 

Follow Us:
Download App:
  • android
  • ios