Asianet News TamilAsianet News Tamil

மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை.. கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்.. முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை.!

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Medical experts warn... Edappadi Palanisamy consulting with health department
Author
Tamil Nadu, First Published Sep 8, 2020, 11:21 AM IST

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக மார்ச் 24ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, தமிழகத்தில் 5 மாதங்களாக  ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டது. முக்கியமாக கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் பேருந்து போக்குவரத்து, வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி, இபாஸ் நடைமுறை ரத்து மால்கள், பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட முக்கிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Medical experts warn... Edappadi Palanisamy consulting with health department

அதேபோல், நேற்று முதல் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை, ரயில் போக்குவரத்து சேவையும் தொடங்கியது. இதனால், கொரோனா பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், இதுபோன்ற சூழ்நிலையை சமாளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

Medical experts warn... Edappadi Palanisamy consulting with health department

ஊரடங்கு தளர்வுகளால் கொரோனா அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் கொரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios