Asianet News TamilAsianet News Tamil

அரசியல் கட்சிகளின் மெக்கானிசமும் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதியும்..! ஒரு பரபர ரிப்போர்ட்!

வாக்குப்பதிவு நிறைவு பெற்று ஒரு காபந்து அரசாக இருக்கும் அதிமுக அரசு அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மிக மிக ஆர்வமாக சென்று திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆதரவு தெரிவித்தது தான் அரசியல் கட்சிகளின் மெக்கானிசம்.

Mechanism of political parties and permitting sterlite oxygen production
Author
Tamil Nadu, First Published Apr 27, 2021, 9:53 AM IST

வாக்குப்பதிவு நிறைவு பெற்று ஒரு காபந்து அரசாக இருக்கும் அதிமுக அரசு அழைப்பு விடுத்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மிக மிக ஆர்வமாக சென்று திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஆதரவு தெரிவித்தது தான் அரசியல் கட்சிகளின் மெக்கானிசம்.

Mechanism of political parties and permitting sterlite oxygen production

நெட்பிளிக்சில் த மெக்கானிசம் என ஒரு அருமையான பிரேசிலியன் அரசியல் வெப் சீரிஸ் உள்ளது. மொத்தம் இரண்டு சீசன்கள் என 16 எபிசோட்டுகள் இந்த சீரிசில் உள்ளன. பிரேசிலில் அரசியல் கட்சிகள் எப்படி இயங்குகின்றன, அதிகாரிகள் எப்படி இயங்குவார்கள், கான்ட்ராக்டர்கள் என்பவர்கள் யார்? என்பன போன்றவற்றை எல்லாம் மெக்கானிசம் சீரிசில் அவ்வளவு அழகாக எடுத்துக்கூறியிருப்பார்கள். உலகின் 7வது மிகப்பெரிய பொருளாதார நாடாக பிரேசில் உயர்ந்தது எப்படி, அதில் கான்ட்ராக்டர்களின் பங்களிப்பு என்ன, பெருந் தொழில் அதிபர்கள் யார், நாட்டின் உயர் பொறுப்பிற்கான தலைவர்களை அவர்கள் தேர்வு செய்வது எப்படி என்பதை எவ்வித சமரசமும் இன்றி கூறியிருப்பார்கள்.

இந்த சீரிசின் இரண்டாவது சீசனில் ஒரு காட்சி வரும், நாட்டின் பெருந் தொழில் அதிபராக இருக்கும் ஒருவர் விசாரணையின் போது சில தகவல்களை கூறுவார். அதாவது தேர்தல் சமயத்தில் எப்படி ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக்கட்சி என மூன்று பேருக்கும் அவர் பெருந்தொகையை கொடுத்து தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறார் என்பது தான் அந்த காட்சி. அதாவது காலையில் ஆளும் கட்சியாக வரப்போகும் கட்சியின் தலைவர் வந்து அந்த தொழில் அதிபரை சந்திப்பார். அப்போது, தனக்கு தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்று அவர் கேட்பார். எவ்வளவு என்று தொழில் அதிபர் கேட்க, ஒரு 10 மில்லியன் வேண்டும் என்பார் ஆட்சிக்கு வரப்போவதாக கூறும் தலைவர், உங்களுக்கு என்ன 15 மில்லியன் வாங்கிக் கொள்ளுங்கள் என்பார் தொழில் அதிபர்.

Mechanism of political parties and permitting sterlite oxygen production

மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த 15 மில்லியன் டீலை முடித்துவிட்டு ஆட்சிக்கு வரப்போவதாக கூறும் தலைவர் அங்கிருந்து புறப்படுவார். அதன் பிறகு தற்போது ஆட்சியில் உள்ள கட்சியின் தலைவர் வந்து அந்த தொழில் அதிபரை சந்திப்பார். அவரிடம் எவ்வளவு வேண்டும் என்று தொழில் அதிபர் கேட்பார், அதற்கு அவரும் 15 மில்லியன் வேண்டும் என்பார் அந்த தலைவர். ஆனால் அவ்வளவு தர முடியாது என்று கூறி 10 மில்லியனை மட்டும் கொடுத்து அனுப்புவார் பெருந் தொழில் அதிபர். பிறகு மாலையில் ஆளும் கட்சியாக வரப்போகும் கட்சியின் கூட்டணிக்கட்சி தலைவர் வந்து சந்திப்பார். அவர் வந்து தெழில் அதிபரிடன் 5 மில்லியன் கேட்பார், அவருக்கு ஏழரை மில்லியன் கொடுத்து அனுப்புவார் தொழில் அதிபர்.

Mechanism of political parties and permitting sterlite oxygen production

இப்போது தமிழ்நாட்டிற்கு வருவோம், கடந்த வாரம் வரை ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட்டை அனுமதிக்க கூடாது என்று கூறி வந்த அரசியல் கட்சிகள் ஒரே நாளில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. இது தான் மெக்கானிசம் என்பார்கள். அதாவது பெருந்தொழில் அதிபர்கள் தொடர்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் எப்படி செயல்படும் என்பதை நெட் பிளிக்சின் த மெக்கானிசம் சீரிசிடம் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். தேர்தல் முடிந்த கையோடு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டையும் அதோடு தொடர்புபடுத்தி பாருங்கள். இப்படித்தான் அரசியல் கட்சிகள் இயங்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios