ரயில்வே துறைத் திட்டங்களில் தமிழகத்துக்கு மிகமிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது; தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. ரயில்வே துறையின் நிதிநிலை அறிக்கையை பொது நிதிநிலை அறிக்கையோடு சேர்த்தது படுமோசமான நடவடிக்கை. முன்பை போல ரயில்வே துறைக்கு தனியாக வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும். 


சிந்து சமவெளி நாகரீகத்தை திடீரென சரஸ்வதி நாகரிகம் என சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்படி ஒரு நதி இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அது ஒரு மாயை என்று மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.


மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடந்தது. இதில் பங்கேற்று பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “நான், பெரியார் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன். தந்தை பெரியாரும், அம்பேத்கரும்தான் இந்த நாட்டில் சமூக நீதி என்ற கருத்தை விதைத்தவர்கள். அந்தச் சமூக நீதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது. பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பது கட்டாயமல்ல; இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று கூறியுள்ளது. இதுகுறித்து இந்த அரசு என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறது?
ஆதிச்சநல்லூரில், தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மகிழ்கிறேன். கீழடியிலும் ஓர் அருங்காட்சியகத்தை அமைக்க கோருகிறேன். ரயில்வே துறைத் திட்டங்களில் தமிழகத்துக்கு மிகமிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது; தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. ரயில்வே துறையின் நிதிநிலை அறிக்கையை பொது நிதிநிலை அறிக்கையோடு சேர்த்தது படுமோசமான நடவடிக்கை. முன்பை போல ரயில்வே துறைக்கு தனியாக வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.


சிந்து சமவெளி நாகரீகத்தை திடீரென சரஸ்வதி நாகரிகம் என சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்படி ஒரு நதி இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அது ஒரு மாயை. ஈராஸ் பாதிரியாரும், பல்வேறு வரலாற்று ஆய்வு அறிஞர்களும், மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகம் என்பது திராவிட நாகரிகம்தான் என்பதை அறுதியிட்டுக் கூறி இருக்கிறார்கள். ஆனால், இந்த அரசு, வரலாறையும், பண்பாடு நாகரிகத்தையும் திரிக்க முயற்சிக்கிறது.” என்று வைகோ பேசினார்.